BREAKING NEWS

அரசியல்

தொடரும் சர்ச்சைகள்..
சிக்கலில் அதிமுக!

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது இரணியல் காவல் நிலையத்தில் மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர் நாஞ்சில் முருகேசன். இவரது மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராக அறிவித்துத்தான் நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. நாகர்கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அதிமுகவின் மேயர் வேட்பாளரின் அப்பா நாஞ்சில் முருகேசன் புதிய சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் வார்டுக்குள் சுற்றிச், சுழன்று பணி செய்துவருகிறார். நாஞ்சில் முருகேசன் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை நாகர்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தக் காலக்கட்டத்திலேயே அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். ஒழுகினசேரி பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் பாரில் இரவும், பகலும் இடைவிடாது சாராய வியாபாரம் நடப்பதாக முந்தைய ஆட்சியிலேயே இவர் மீது சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ரியல் எஸ்டேட் புள்ளியான நாஞ்சில் முருகேசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவும் மாற்றினார். ஆனால் இதில் எல்லாம் அவருக்கு சிக்கல் எழவில்லை.

முகப்பு
நிகழ்வு
சினிமா
பெண் சக்தி
வாழ்க்கை
தரிசனம்
வலைப்பூ
தொடர்கள்
வீடியோ
மேலும்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை(பிப்.15) முதல் கவுண்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்
விரைவில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரேவை சந்திப்பேன் -தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
இந்தியாவுக்கு வர சர்வதேச பயணிகளுக்கு இன்றுமுதல் தளர்வுகள்
ஓய்வுபெற்ற நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
வெற்றிகரமாக செயற்கைக்கோள் நிலைநிறுத்தம் – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி கே வாசன் பாராட்டு
மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் விசாரணை
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – ஓபிஎஸ்
சீனாவில் உருவாக்கப்பட்ட 54 அலைபேசி செயலிகளை தடை செய்ய இந்திய அரசு முடிவு
திருவண்ணாமலை – திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் – பள்ளிக்கல்வித் துறை விசாரணை தொடங்கியது
தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பதவியேற்றார்
தங்கம் விலை சவரனுக்கு 224 குறைந்து 37,496 க்கு விற்பனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – திமுக சுயேச்சை வேட்பாளர்கள் 56 பேர் இடைநீக்கம்
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெ ண் 17,000 புள்ளிகளுக்கு கீழ் சரிவு
டெல்லி – போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
எல் ஐ சி யின் பங்குகளை விற்க செபியிடம் வரைவு ஆவணங்கள் தாக்கல்
வத்திராயிருப்பு பேரூராட்சி 2 வது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் உயிரிழந்தார்
ஹிஜாப் விவகாரம் – 19 ம் தேதி வரை உடுப்பியில் 144 தடை
கர்நாடகத்தில் 10 ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கின
சென்னை – பழைய அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்க தொடங்கின

தொடரும் சர்ச்சைகள்… இடியாப்பச் சிக்கலில் அதிமுக!
அதிமுக மேயர் வேட்பாளரின் தந்தை மீது மேலும் ஒரு பாலியல் புகார்
தொடரும் சர்ச்சைகள்… இடியாப்பச் சிக்கலில் அதிமுக!
நாஞ்சில் முருகேசன்
என்.சுவாமிநாதன்
Updated on :
14 Feb, 2022, 11:25 am
2 min read
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது இரணியல் காவல் நிலையத்தில் மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர் நாஞ்சில் முருகேசன். இவரது மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராக அறிவித்துத்தான் நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. நாகர்கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அதிமுகவின் மேயர் வேட்பாளரின் அப்பா நாஞ்சில் முருகேசன் புதிய சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் வார்டுக்குள் சுற்றிச், சுழன்று பணி செய்துவருகிறார். நாஞ்சில் முருகேசன் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை நாகர்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தக் காலக்கட்டத்திலேயே அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். ஒழுகினசேரி பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் பாரில் இரவும், பகலும் இடைவிடாது சாராய வியாபாரம் நடப்பதாக முந்தைய ஆட்சியிலேயே இவர் மீது சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ரியல் எஸ்டேட் புள்ளியான நாஞ்சில் முருகேசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவும் மாற்றினார். ஆனால் இதில் எல்லாம் அவருக்கு சிக்கல் எழவில்லை.

அதிமுக மேயர் வேட்பாளர் ஸ்ரீலிஜா
அதிமுக மேயர் வேட்பாளர் ஸ்ரீலிஜா
அண்மையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மேல் புகார் எழுந்தது. இதனால் முந்தைய அதிமுக ஆட்சியிலேயே கடந்த 2017 ஆம் ஆண்டு நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நாஞ்சில் முருகேசனை அதிமுக தலைமை நீக்கியது. சிறையில் இருந்து வெளியில் வந்தவர் அதிமுகவில் சேர தொடர்ந்து தூதுவிட்டுவந்தார். அதற்கு உள்ளாட்சித் தேர்தல் கைமேல் பலன் தந்தது. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராகவும் அறிவித்தது அதிமுக.

இந்நிலையில் வில்லுக்குறியை சேர்ந்த குமார் (47) என்பவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “நான் எனது மனைவி விஜய ஸ்ரீ மற்றும் இருமகள்களுடன் வசித்துவருகிறேன். என் மனைவிக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை நான் நேற்று இரவு பார்த்துவிட்டேன். உடனே என்னை நாஞ்சில் முருகேசனும், அவரது ஓட்டுனர் மகேஷும் சேர்ந்து சரமாரியாக அடித்தனர்’’ என குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் இரணியல் போலீஸார், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் பெற முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை பலமுறை தொடர்பு கொண்டோம். அவரது அலைபேசி எண் அணைத்துவைக்கப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )