BREAKING NEWS

அரசியல்

அதிமுவில் வென்று விட்டு கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்.. அட்ராசிட்டி செய்த ஒன்றிய செயலாளருக்கு ஆப்பு

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் அம்மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும் அவர்களை வீடு புகுந்து வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் போட்டியின்றி வெற்றிபெற்று கட்சி மாறினால் வெட்டுவேன் என பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது  3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிப்ரவரி 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் அம்மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும் அவர்களை வீடு புகுந்து வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார். 

மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். யார் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு,  கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.  இவ்வாறு கூறுவதற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்தாலும் பிரச்சனை இல்லை. மேலும், கட்சி மாற நினைப்பவர்கள்  மரணத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சண்முகக்கனி வீடியோ வைரலானது. இதனையடுத்து, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது  3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )