BREAKING NEWS

அரசியல்

சறுக்குவதெல்லாம் சாதனைக்கு..! பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவோம்.. அதிரடி காட்டிய விஜய்காந்த் அறிக்கை..

பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம் என தேமுதிகதலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தொண்டர்களுக்கு கடிதம் மூலம்வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதில், நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேமுதிக தனித்துபோட்டியிடுவதால், வேட்பாளர்களும், முரசு சின்னமும் ஒவ்வொருவீட்டுக்கும் செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த தேர்தலை தேமுதிகவினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள்தான் நமக்கான இலக்கு. எனவே, இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் என்பதைக் கருத்தில் கொண்டு அனைவரும் உழைக்க வேண்டும்.

ஒவ்வொரு வார்டுகளுக்கும் நடக்கும் கவுன்சிலர் தேர்தல் என்பதால், 10 பேர் கொண்டு குழுவினர் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என வாக்குறுதிஅளித்து வாக்கு சேகரியுங்கள். ஆட்சி பலம், அதிகார பலம், பணபலத்தை எதிர்த்து போட்டியிடும் நாம், தேர்தல் வெற்றிக்கு வியூகம்அமைத்து உழைக்க வேண்டும்.

திமுக கூட்டணியை தவிர, மற்றகட்சிகள் தனித்து போட்டியிடுவதால், நமது பலத்தை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழகம் முழுவதும் பெரிய வாக்குவங்கியை மீண்டும் கைப்பற்றிட முயற்சிக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன், சிறந்த முறையில்பணியாற்றி தேமுதிக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து, தோல்வியைச் சரி செய்து வருங்காலத்தில் இமாலய வெற்றிபெறுவோம். தோல்வியை எதிர்கொண்டவர்கள் பெரிய வெற்றிக்கு உரியவர்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )