BREAKING NEWS

அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மைய உறுப்பினர்களுக்கு பயிற்சி.

அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மைய உறுப்பினர்களுக்கு பயிற்சி.

 

மயிலாடுதுறை மாவட்டம்,  திருவிழந்தூர், சன்னதி தெரு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய அரசு ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் அரசு அனுமதி பெற்ற பொது சேவை மையத்தின் மூலம்,..

 

பொதுமக்களுக்கு எப்படி கொண்டு செல்வது அவர்கள் எப்படி பயன்படுத்துவது குறித்து பயிற்சி கூட்டம் மாவட்ட மேலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. 

 

மாவட்ட துணை தலைவர் அருண் அறிவுடைநம்பி வரவேற்று பேசினார். மயிலாடுதுறை மாவட்ட பொது சேவை மைய தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார். மாநில பொது சேவை மைய பொறுப்பாளர் கார்த்திக் பொது சேவைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

 

பயிர் காப்பீட்டு தொடர்பாக ராஜசேகரன் & ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்ட பொறுப்பாளர் சுரேஷ் கந்து பயிற்சி அளித்தார்.

 

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொது சேவை மைய உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்ட பொது சேவை மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்ட செயலாளர் மணிமாறன் நன்றி உரை ஆற்றினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar
    arun 3 years

    Super

  • Disqus ( )