BREAKING NEWS

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.

காமராஜர் பிறந்தநாளில் மாணவிகளுக்கு கிடைக்கப் போகிறது 1000 ரூபாய்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி அமலுக்கு வரும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, கலை அறிவியல், பொறியியல், வேளாண், கால்நடை உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி 3 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் எனவும், குறிப்பாக கலை அறிவியல் படிப்புகளில் மட்டும் ஒரு லட்சம் மாணவிகள் பலன் பெற உள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கல்லூரி மாணவிகளுக்கு பலனளிக்கக் கூடிய இந்த திட்டம் ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாள் அன்று அமலுக்கு வர உள்ளதாகவும் மாணவிகளுடைய வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )