அரவட்லாவில் பழைய அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஒன்றிய ஆணையர் கௌரிக்கு பொதுமக்கள் பாராட்டு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா ஊராட்சிக்கு உட்பட்ட.
பாஸ்மர்பெண்டா கிராமத்தில் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அங்கன்வாடி பள்ளி ஒன்று சுப்பிரமணியின் அனுமதியோடு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த அங்கன்வாடி பள்ளி மிகவும் பழுதடைந்து விட்டதால் புதிய அங்கன்வாடி பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டு மாணவ, மாணவிகள் தற்போது அங்கு பயின்று வருகிறார்கள். இந்நிலையில்.
பழுதடைந்த இந்த அங்கன்வாடியை ஒரு காலத்தில் இந்த அங்கன்வாடி பள்ளியை கட்டிக் கொள்ள இடத்தை தானமாக வழங்கியதால் யாருடைய முன் அனுமதியும் பெறாமல் இந்த இடத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் இந்த அங்கன்வாடி பள்ளியை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்.
அதில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர் கௌரியிடம் வாய்மொழியான புகார்கள் பொதுமக்கள் தரப்பில் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய ஆணையர் கௌரி , சுப்பிரமணி மீது பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்து சுப்பிரமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து பாஸ்மர்பெண்டா மற்றும் அரவட்லா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிய ஆணையர் கௌரிக்கு தங்களது பாராட்டுகளையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.