அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி
அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஊரணித்தெரு நாடார் இளைஞர் அணி சார்பில் மாபெரும் விளையாட்டுப் போட்டி.

அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஊரணித்தெரு நாடார் இளைஞர் அணி சார்பில் மாபெரும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசளிப்பு வழங்கும் விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஊரணித்தெரு நாடார் இளைஞர் அணி சார்பில் மஞ்சள்நீராட்டு விழா மற்றும் மாபெரும் கோலப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே பழனிச்செல்வம், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜீத்ஆனந்த்,14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தவமணி, தலைமையில் தொழிலதிபர்கள் சேர்மக்கனி, சொர்ணமாரியப்பன், பத்திரகாளி கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,சண்முகராஜா,சந்திரசேகர், வேல்முருகன், முன்னணியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமலி பிரகாஷ், அமலி சேசுராஜா, குழந்தை ராஜ், அருள்ராஜ்குமார், முத்துமாரியப்பன், வேலுச்சாமி, சீனிவாசன், செல்வராஜ், மணிராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
