அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ சீலைக்காரி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவானது கடந்த 3 நாட்களாக 4 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சீலைக்காரி அம்மன் கோவில் பங்காளிகள், ஆதனூர் கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.
CATEGORIES மதுரை