ஆடிப்பெருக்கு விடுமுறையை திடீரென இரவில் ரத்து செய்த கலெக்டர்: கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று ஈடு செய்யும் விடுப்பு அறிவித்துவிட்டு அதை இரவு 9 மணிக்கு மேல் ரத்துசெய்த கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக கல்வித்துறை சார்ந்த சில பிரச்சினைகளை கையாண்ட விதத்தில் ஏற்கேனவே மாவட்ட ஆட்சியருக்கு அவப்பெயர் இருக்கும் சூழலில், உள்ளூர் விடுமுறையை ரத்து செய்து இரவு 9 மணிக்கு மேல் உத்தரவிட்ட நிகழ்வு ஆசிரியர்கள் மத்தியில் மேலும் அவருடைய மதிப்பை குறைக்கும் செயலாக இருக்கிறது. எங்களின் நியாயமான அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இடம் கொடுக்காத மாவட்ட ஆட்சியரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று ஆத்திரத்தோடு செல்கிறார்கள்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் தரப்பில், ‘காவிரியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி அளவிற்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டால் மாணவர்கள் ஆற்றங்கரைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு மாவட்ட நிர்வாகத்தை குறை சொல்வார்கள். அதனால்தான் மாணவர்கள் ஆற்றுக்கு செல்வதை தடுக்கும் விதமாக இன்று பள்ளி உண்டு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு அதன் காரணம் தெரியாமல் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்.
