BREAKING NEWS

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான் (எ) கருப்பனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு,

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான் (எ) கருப்பனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு,

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் ஏரிக்கரை அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்லேரியான்( எ) கருப்பனார் கோவிலில் புதிதாக புணரமைக்கப்பட்டு 17 அடி உயரமுள்ள கருப்பனார் சிலைக்கு இன்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது,

 

 

தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கடந்த 30 தேதி கணபதி ஹோமம் முகூர்த்தக்கால் நடுதல் முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கி,

 

 திருவிளக்கு ஏற்றுதல் ,கோ பூஜை, குபேர கணபதி ஹோமம், பால்குடம் எடுத்து திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை மூன்றாம் கால யாக பூஜை, நடைபெற்றது.

 

புன்னியஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாக சாலையில் வைக்கப்பட்டு மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலைச் சுற்றி மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு,..

 

அருள்மிகு ஸ்ரீ கல்லேரியன் என்கின்ற கருப்பனார், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீசெல்லியம்மன், ராயப்ப சுவாமிகளுக்கு புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு மஹா தீபாராதனை செய்தனர்.

 

 

 அங்கு திரண்டு இருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர், மேலும் அருள்மிகு ஸ்ரீ கல்லேறியான் என்கிற கருப்பனார், ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ ராயப்ப சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது, 

 

 இதில் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருப்பனார் அய்யனார் செல்லியம்மன் ராயப்ப சுவாமிகளை தரிசித்துச் சென்றனர்.

 

மேலும் அங்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்சுமி போர்வெல்ஸ் குடும்பத்தினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )