ஆம்பூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் – பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தோல் தொழிலுக்கும், உணவுப் பிரியர்களால் பிரியாணிக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இந்திய ஏற்றுமதி வணிகத்தில் ஆம்பூர் பகுதியிலிருந்து நடைபெறும் தோல் ஏற்றுமதி முக்கிய பங்காற்றி வருகிறறது. இந்தியா தோல் தொழிலில் ஆம்பூர் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலேயே தோல் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலாவணி ஈட்டுவது ஆம்பூர் பகுதி தோல் தொழிற்சாலைகள் மூலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் பகுதி தோல் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு இந்த தோல் தொழிற்சாலைகள் மூலம் கிடைத்துள்ளது.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அமைந்துள்ளதால் பொது போக்குவரத்துக்கு உகந்த ஊராக திகழ்கிறறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் மிக அருகருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே அமைந்துள்ளன.
வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் இருந்தாலும், ஆம்பூருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. புதிதாக ஏற்படுத்தப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்திலேயே ஆம்பூர் பகுதி தோல் தொழிற்சாலைகளால் மட்டுமே அரசுக்கு அதிக அன்னிய செலாவனி மற்றும் அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஊராக ஆம்பூர் அமைந்துள்ளது.
இவ்வாறு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிதரக்கூடிய ஆம்பூரில் புதிதாக மாவட்டம் பிரிக்கப்பட்டபோது எந்தவிதமான அரசு அலுவலகங்களும் அமைக்கப்படவில்லை. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் மட்டுமே பலனடைந்தன. ஆம்பூர் தொகுதி பின்னடைவை சந்தித்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. மாவட்ட தலைமையிடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அரசுத் துறைற அலுவலகங்கள், மாவட்ட காவல் துறைற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஜோலார்பேட்டை தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. வாணியம்பாடி தொகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வேலை வாய்ப்பு அலுவலகம், அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.
ஆம்பூரில் அதிக தொழிற்சாலைகள், தொழில் சம்பந்தமான நிறுவனங்கள் அமைந்துள்ளதால் மாவட்ட தொழில் மைய அலுவலகம் ஆம்பூர் பகுதியில் அமைக்கப்பட வேண்டுமென்றற தொழில் துறைறயினரின் கோரிக்கையும் நிறைறவேற்றறப்படவில்லை.
தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய அரசு மருத்துவக் கல்லூரியை ஆம்பூரில் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே அமைந்துள்ளதால் பொதுமக்கள் எந்தப் பகுதியிலிருந்தும் ஆம்பூருக்கு மிக எளிதாக சென்று வரக்கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியும் உள்ளது. பேருந்து, ரயில் சேவைகள் அதிகமாக உள்ளது. ஆம்பூர் அனைத்து துறைறகளிலும் வளர்ச்சி பெற்றற நகரமாகும். எனவே ஆம்பூர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலேயே அரசுக்குச் சொந்தமான இடத்தில் அரசு மருத்துவ கல்லூரியை ஏற்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான இடம் போதிய அளவு இல்லையெனில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியாரிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி அந்த இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.
அதே போல ஆம்பூர் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும் என்பது ஆம்பூர் பகுதி பொதுமக்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாகும்.
தமிழக அரசு இதுகுறித்து தனி கவனம் செலுத்தி ஆம்பூர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.