ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.

கோவில்படியில் உரிமையாளர் இல்லம், மருத்துமனை,ஸ்கேன் சென்டர் உள்ளிட்ட இடங்களில் 6 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் 6 குழுக்கள் கொண்ட அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி
