BREAKING NEWS

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை எஸ்பி சுதாகர் துவக்கி வைத்து தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கவனமாக கடைபிடித்தல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அறிதல் காரில் பயணம் செய்யும்போது சீழ் பெற்று அணிதல் அதிவேகம் அதிக ஆபத்து உள்ளிட்ட வாசகங்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

 

 

துவக்க விழா காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே காஞ்சி மாவட்ட மருத்துவ சங்க தலைவர் மருத்துவர்.மணோகரன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்,

 

 

கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து மற்ற வாகன ஓட்டிகளும் இதை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

இந்நிகழ்ச்சியில் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் , சிவகாமி ஆய்வாளர் விநாயகம், போக்குவரத்து துணை ஆய்வாளர் ரவி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS