BREAKING NEWS

இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி!! அமைச்சர் அதிரடி !!

இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி!! அமைச்சர் அதிரடி !!

தக்காளி

தமிழகத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. குறிப்பாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. இதனையடுத்து நேற்று தக்காளியை தொடர்ந்து பீன்ஸ் , அவரைக்காய் என காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியது.

பீன்ஸ், தக்காளி

இதனை  கட்டுப்படுத்த தக்காளிகள் பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் கனமழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மொத்த மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் . அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் . வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது. தேவையின் அடிப்படையில் நியாயவிலை கடைகள் மூலமும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )