BREAKING NEWS

இன்று முதல் விண்ணப்பங்கள் வெளியீடு!!

இன்று முதல் விண்ணப்பங்கள் வெளியீடு!!

NEET அடுத்து CUET.. மத்தியப் பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு  கட்டாயம் ! - You Turn

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவைகளும் அந்தந்த காலகட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவின் பல மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளும் CUET  தேர்வுகளுக்கான விண்ணப்பம் இன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து  மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர முடியும். இந்திய அளவி ல் நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் (CUET)தேர்வு இது என அறியப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை மருத்துவ கல்வி பயில நீட் தேர்வும், பொறியியல் படிப்புக்களை படிக்க ஜேஇஇ தேர்வுகளும் எழுத வேண்டியது அவசியம். அதே போல் நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியம் என பல்கலைக்கழக மானியக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என  பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்திருந்தது. மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் ஜூன் 18 வரை விண்ணபிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை யுஜிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமல்லாமல் CUET மதிப்பெண்கள் கட்டாயம் என்று UGC ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )