இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக புகார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் இரயில் நிலையத்திற்கும் சேவூர் இரயில் நிலையத்திற்கும் இடையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக சேவூர் இரயில் நிலைய அதிகாரி திரு. ஐசக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி இரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி சித்ரா அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடம் சென்று பிரேத விசாரணை செய்ததில் இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை இறந்தவர் இரயில் தண்டவாளத்தை கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் இரயில் தண்டவாளப்பாதையை குறுக்கே கடந்த சமயம் காட்பாடி மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு இரயிலில் அடிப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை உடல் வெளியேறி உடல் சிதைந்து அதிகப்படியான இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என விசாரணையில் தெரிய வருகிறது
இறந்தவர் நீலக் கலரில் டிராக் பேண்ட் , கருப்பு மட்டும் சிமெண்ட் கலரில் கட் பணியன் நீலக் கலரில் ஜட்டி அணிந்து காணப்பட்டார் இறந்தவர் அடையாளம் காணும் பொருட்டு வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது இறந்தவரை பற்றிய தகவல் தெரிந்தால் காட்பாடி இரயில்வே காவல் நிலைய தொலைபேசி எண் 9498101961என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.