BREAKING NEWS

இரவு பெய்த கனமழையில் தஞ்சை அருகில் மின்சாரம் தாக்கி காவல் நிலைய ஓட்டுனர் மதன் உயிர் இழந்தார்.

இரவு பெய்த கனமழையில் தஞ்சை அருகில் மின்சாரம் தாக்கி காவல் நிலைய ஓட்டுனர் மதன் உயிர் இழந்தார்.

தஞ்சை மாவட்டம் வேம்பங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் மதன் (24). இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று 22ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு ‘வந்து கொண்டு இருந்த மதன் மழை பெய்ததால் தனது வாகனத்தை தெரு ஓரமாக நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்று உள்ளார்.

மழை விடாமல் தொடர்ந்து பெய்து வந்ததால் வீட்டுக்கு செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது, சாலை மையத்தில் இருந்த உயர் மின் விளக்கில் இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி மதன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை காவலதுறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் உயிர் இழந்த சம்பவம் வேம்பங்குடி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )