இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட மீனவர்களை எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் (32 ) ஆகியோர்
புதன்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலை சேதப்படுத்தி இரும்பு பைப்பால் தாக்கப்பட்டு படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் எடுத்து சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த 6 மீனவர்களும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.