ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் பவானி லட்சுமி நகரில் உள்ள பவிஷ் பார்க்கில் மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஆட்டோ ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.

இதில், பவானி சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆட்டரலசு, அந்தியூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை செல்வன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு போன்ற அத்தியவசிய பொருள்களின் விலை ஏற்றத் திற்கும் வேலை இல்லா திண்டாட்டம் மத வெறுப்பு அரசியல் செய்யும் பாஜக வின் ஒன்றிய மோடி அரசை கண்டித்து வருகின்ற 26 27 ஆகிய தேதிகளில் ஈரோடு வடக்கு மாவட்டம் வட்டார அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம் ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு மக்களிடம் கொண்டு செல்லுவது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
