உங்களது திறனை வெளிப்படுத்த உங்களது செல்போனை போதும் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி .

நடிகர் ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் வெளிவந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் வீட்ல விசேஷங்க திரைப்படத்தை பொது மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் நடிகர் ஆர்.கே.பாலாஜி மற்றும் படகுழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் வீட்ல விசேஷங்க படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள திரையரங்கத்தில் மேடையின் முன்பு தோன்றி ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். தொடர்ந்து ரசிகர்களிடம் கருத்து கேட்ட அவர் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறிய நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து படம் பார்க்க வந்த மக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
ஆர்.ஜே பாலாஜி
மக்களிடம் இப்படம் குறித்து நல்ல வரவேற்பு நன்றாக உள்ளது. குடும்பத்துடன் வந்து பெண்கள் என அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர்
திலீப்குமார், தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன் என அந்த காலம் முதல் ரீமேக் படங்கள் தமிழில் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு மொழி படங்கள், கதைகள் நன்றாக இருந்தால் மற்ற மொழிகளில் அதனை கொண்டு செல்வது தவறில்லை. தமிழில் கதை பஞ்சம் என்பது எல்லாம் இல்லை.
நடிகர் பாக்யராஜின் படங்கள் பல போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார்.
தமிழில் வெளியான கைதி திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
கதைக் களத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து நடிகர்களும் திறம்பட நடித்தார்கள்,
நான் மற்றும் சரவணன் ஆகிய எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் இருப்பதால் சேர்ந்து இந்த படத்தை இயக்கி உள்ளோம்.
கொரோனா ஊரடங்கில் குடும்பம் விருத்தி அடைந்துள்ளது என்பதால் இந்த கதையை தேர்வு செய்து படம் பண்ணவில்லை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
சிறிது காலம் பொறுத்திருந்தால் பான் இந்தியா படங்கள் தமிழகத்திலிருந்தும் நிறைய படங்கள் வெளிவரும், விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சிறப்பான வசூலை பெற்றுள்ளது, மக்கள் அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர். 310 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளோம், இது 5மணிக்கே படம் திரையிட்ட உடனே கும்மாளமிட்டு பார்க்கவேண்டிய படம் கிடையாது.
மற்றவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல கேள்விப்பட்டு பலர் வந்து பார்க்க கூடிய படம்.
ஆர்.ஜே.பாலாஜி என்பது எனக்கு கிடைத்த ஒரு அடையாளம், அடையாளம் இல்லாத மிடில் கிளாஸ் பெஞ்ஜில் இருப்பது போல் இருந்தேன், இந்த வேலைதான் எனக்கு அடையாளம் கொடுத்ததால் அந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்த வேலையை தொடர்ந்து செய்வேன். இந்த வேலையை செய்வதால் கிடைத்த நற்பலன்கள் சினிமாவும் ஒன்று.
திரைத்துறை சுதந்திரமாக தான் இருக்கிறது. இந்த படத்தை கொடுத்தால் நன்றாக பிரமோட் செய்வார்கள் என்ற எண்ணத்தில்தான் விரும்பி கொடுக்கிறார்கள். எனக்கு எந்தவித சுதந்திர பிரச்சனையும் இருந்ததில்லை. உங்களிடம் உள்ள திறனை சரியான முறையில் வெளிப்படுத்தினால் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும், உங்களது திறனை வெளிப்படுத்த உங்களது செல்போனை போதுமானதாகும் என தெரிவித்தார்.
