BREAKING NEWS

உடுமலை அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழாவை முன்னிட்டு விதைபந்து வீசி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக விதை பந்துகள் வழங்கப்பட்டது.

உடுமலை அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில் தந்தையர் தின விழாவை முன்னிட்டு விதைபந்து வீசி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக விதை பந்துகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா ஓட்டமடத்தில் உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளியில்
தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாணவர்களின் தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் தந்தையர் தின விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்குப் பள்ளியின் நிறுவனர் பி. கோவிந்தராஜன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கிராம புறத்தில் உள்ள குழந்தைகள் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்பள்ளி ஓட்டமடத்தில் துவங்கப்பட்டது.

 

இங்கு படிக்கும் மாணவர்களும் உயர்ந்த பணிகளை அடைந்து மற்றும் சிறந்த தொழில்களை தொடங்கி கிராமத்தில் வாழும் மக்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியாற்றிட வேண்டும் என்று கூறினார்.

 

சிறப்பு விருந்தினர் லட்சுமி ஆட்டோமட்டிங் லூம் ஒர்கஸ் தொழில் நுட்ப ஆலோசகர் பி.சுந்தர்ராஜு பேசும்போது, ’குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தமது தந்தையை நாயகனாக பார்க்கின்றனர். காலம் செல்ல செல்ல தந்தை கண்டிப்பானவராக இருப்பதை கண்டு பிடிக்காத நபராக மாறிவிடுவார். 50 வயதை எட்டும் போது தந்தையின் அருமை அன்பை புரிந்து தனது தந்தையை மீண்டும் நாயகனாக பார்க்கின்றனர்’ என்றார்.

 

பள்ளியின் செயலர் சுமதி கிருஷ்ணசாமி குத்துவிளக்கேற்றி வைத்து பேசும்போது,’ ஒரு நல்ல நண்பன் இறைவனின் அன்பளிப்பு ஆகும். அதே போல நல்ல ஓர் தகப்பன் இறைவனாகவே மாறிவிடுவார். தந்தையர் தினத்தில் அவரின் பெருமைகளை நினைவு கூர்ந்து, தந்தையர் மீது கட்டுப்பாடுகளற்ற அன்பு செலுத்துவோம்’ என்றார்.

 

சிறப்பு விருந்தினர்கள் எம். கோபிநாதன், எஸ்..வித்யா சேகர், என்..பூபாலகுருசாமி, சேகர் சிவசாமி, என். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

பள்ளியின் இயக்குநர் இலட்சுமிப் பிரியா, முதல்வர் பாலமுருகன், பெற்றோர்கள் ,ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

 

ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் நடைபெற்ற விதை பந்துகள் தூவிய உலக சாதனை நிகழ்ச்சியில், பங்கேற்று யுனைடெட் பள்ளி மாணவர்களுக்கு எலைட் உலக சாதனைக்கான சான்றும், பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )