உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் கைது.

உடுமலை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது’உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்த அஸ்வின் பிரசாத் மனைவி வளர்மதி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரது மனைவி கவிதாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்துள்ளது.இதில் இந்துமுன்னணி பிரமுகர் குமரவேல் அஸ்வின் பிரசாத்துக்கு உதவியுள்ளார்.

இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 22 ம் தேதி ரஞ்சித்குமாருடன் சேர்ந்து சிலர் குமரவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.அஸ்வின் பிரசாத் காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தப்பி ஓடிய நிலையில் உடனடியாக சிவா என்கிற சிவானந்தம்,ஆத்தியப்பன்,செந்தில் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மீதமுள்ளவர்கள் சென்னை,நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு தப்பிச் சென்ற தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.இந்தநிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியைச் சேர்ந்த கோவில்ராஜ் என்பவரது மகன் ஜான்சன்(வயது 31),நெல்லை மாவட்டம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் மாரியப்பன்(வயது 34)ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித்குமார்,கவிதா உட்பட மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
