உடுமலை நகரில் பூத்துக்குலுங்கும் மே பிளவர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் ஆங்காங்கே, பூத்துக்குலுங்கும் ‘மே பிளவர்’, காண்பவர்களை பரவசம் அடையச்செய்கிறது.
கோடை காலத்தில் மே பிளவர் பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். இந்த ஆண்டும் உடுமலை மற்றும் மூணாறு செல்லும் வழித்தடங்களில் காணப்படும் மரங்கள், குறிப்பிட்ட பருவகாலங்களில், பூத்துக்குலுங்குகின்றன.தற்போது, மே மாதங்களில் மட்டுமே பூத்துக்குலுங்கும், ‘மே பிளவர்’ எனப்படும் மரங்கள், காண்போரை வியப்படையச் செய்கிறது. அவர்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைகின்றனர். பச்சை நிற இலைகளுக்கு மத்தியில், சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள், தொடர்ந்து பார்க்கத்துாண்டுகிறது.
CATEGORIES திருப்பூர்