BREAKING NEWS

உடுமலை வாரச்சந்தையில் மலை போல் குவிந்துள்ள காய் கறிகளால் சுகாதாரக் கேடு.

உடுமலை வாரச்சந்தையில் மலை போல் குவிந்துள்ள காய் கறிகளால் சுகாதாரக் கேடு.

உடுமலை பஸ் நிலையம் அருகே உடுமலை பாலச்சந்தை அமைந்துள்ளது. இங்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். தவிர மேலும் வாரச்சந்தை நாளான திங்கட்கிழமை பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளையும் வாரச் சந்தையில் வியாபாரம் செய்து செய்கின்றனர்.

 

 

அப்பொழுது மீதமாகும் காய்கறி கழிவுகள் அழுகிய நிலையில் கொட்டப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் தற்போது பெய்து வரும் மழையால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

 

 

மேலும் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அந்த பகுதியில் வழியாக நடந்து செல்ல செல்வதற்கு மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அவ்வப்போது கழிவுகளை அகற்றி சுகாதார கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )