BREAKING NEWS

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார் . 1லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு உருவாக்க பட்ட பிரம்மாண்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு, 124வது கண்காட்சி என்ற வாசகம், ஊட்டி 200 மற்றும் செல்பி ஸ்பார்ட் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களைகட்டி வரும் நிலையில், இங்கு நாள்தோறும் ஆயிர கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி ஆகிய நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையல் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலக பிரசித்தி பெற்ற 124 வது மலர் கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். பூங்காவில் 1 லட்சம் கார்கேசன் மலர்களை கொண்டு பிரமாண்டமாக அமைக்கபட்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றம், 20 ஆயிரம் மலர்களால் உருவாக்க பட்ட 124 வது மலர் கண்காட்சி என்ற வாசகம், மற்றும் செல்பி ஸ்பார்ட் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இது மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு பழங்குடியினர் உருவங்கள் மலர்களால் உருவாக்கபட்டிருந்தது.


மேலும் பூங்கா முழுவதும் 5.5 லட்ச மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. மேலும் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துள்ள பால்சம், லில்லியம், மேரிகோல்டு, டேலியா,பெட்டுனியா உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. இவை கண்காட்சிக்காக மாடங்களில் வைக்கபட்டுள்ளன. இது தவிர 20க்கும் மேற்பட்ட அரங்குகளில் மலர்கள் அலங்காரங்கள் காட்சிக்காக வைக்கபட்டுள்ளது.
இந்த மலர் கண்காட்சி இன்று துவங்கி 5 நாட்கள் நடைப்பெறுகிறது.
அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா முதலானோர் உடன் உள்ளனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )