BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது – இனிப்புகள் வழங்கி மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம்.

திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா உட்பட 3 திரையரங்குகளில் இன்று நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கில் திருச்சி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் மேளதாளத்துடன், வெடி வெடித்து, ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இத்திரைப்படம் சமூக நீதி திரைப்படம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )