BREAKING NEWS

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி
கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் புத்தாடைகள், காலை உணவு
டாக்டர் இம்மானுவேல் வழங்கினார்.

கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி புத்தாடைகள், காலை உணவினை டாக்டர் இம்மானுவேல் அவர்கள் வழங்கினார்கள்.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சி கோவிலூற்று பகுதியில் 2023ம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு இல்லமான வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் இயங்கி வருகிறது.

இங்கு ஆண்கள், பெண்கள் ஏராளமான மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இந்த இல்லத்தில் இன்று டாக்டர் . இம்மானுவேல் அவர்கள் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இல்லத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் காலை உணவினை டாக்டர் இம்மானுவேல் அவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கேக் வெட்டி இல்லத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் துணை முதல்வரின் 49வது பிறந்த தினத்தை குறிப்பிடும் வகையில், 49 மெழுகுவர்த்தி ஏற்றி துணை முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இரவில் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பட்டாசுகளும் வழங்கப்பட்டது.

விழாவில் டாக்டர் இம்மானுவேல் அவர்கள் பேசும் போது, இன்று பிறந்த நாள் விழா காணும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை உங்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து நாங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம். எந்த நிகழ்வாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவன் நான். இன்று சற்று கால தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.


பல்வேறு குடும்ப பிரச்சனைகளால், மன பாரத்துடன் இங்கு தங்கியிருக்கும் உங்கள் அனைவரின் எண்ணங்கள், செயல்பாடுகள் அனைத்தும் மருத்துவரான எனக்கு தெரியும். விரைவில் நீங்கள் குணமடைந்திடவும், உங்களின் தேவைகளை பூர்த்தி செய்திடவும் வேண்டியவற்றை செய்து தர தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடன் துணை முதல்வர் அவர்கள் பல நூறு ஆண்டு காலம் நீடுடி வாழ்த்திட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களான பங்கேற்ற சேரன்மகாதேவி சேகரதலைவர் கிப்சன் ஜான்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பூலாங்குளம் திரவியக்கனி குணரத்தினம், வெங்கடாம்பட்டி செல்வி. ஷாருகலா ரவி, ஆலங்குளம் பேரூர் திமுக செயலாளர் நெல்சன் ஆகியோர் பேசுகையில், கோவிலூற்று பகுதியில் அமைந்துள்ள இந்த இல்லத்தில் பல்வேறு குடும்ப பிரச்சனைகளால், மனம் நலன் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் வந்து தங்கியுள்ளனர். அவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் டாக்டர் இம்மானுவேல் அவர்கள் துணை முதல்வரின் பிறந்த தின விழாவை இங்கு உங்களுடன் இணைந்து கொண்டாடி உள்ளார். டாக்டர் இம்மானுவேல் அவர்களின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது.

உங்களை போன்றவர்களை தேடி வந்து, மனபாரத்தில் இருக்கும் உங்களை உற்சாகப்படுத்தி, உங்களுக்கு தேவையானவற்றை செய்து தரும் அவரது செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது சிந்தனை, செயல் நமது சமூகத்திற்கு தேவை. அவருக்கு உங்கள் அனைவரின் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இது போன்ற சேவைகள் தொடர்ந்திட அவருடன் இணைந்து நாம் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்றனர்.

இந்நிகழ்வில் வில்சன் தங்கராஜ், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிவன்பாண்டியன். ஆலங்குளம் பேரூர் திமுக செயலாளர் நெல்சன், ஆலங்குளம் நகர காங்கிரஸ் தலைவர் .வில்லியம் தாமஸ், துணைத்தலைவர் லிவிங்ஸ்டன் விமல், வழக்கறிஞர் கருப்பசித்தன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் .பால்ராஜ், பேரூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் .யாபேஸ், திரு.கந்தசாமி, .ரவி மற்றும் வில்லியம் கிளார்க் அன்பின் இல்ல பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மிகுந்த மனபாரத்துடன், மன உளைச்சலுடன் இருந்த இல்ல வாசிகளுக்கு இவ்விழாவானது ஒரு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS