BREAKING NEWS

உவரியில்பா.ஜ.க. ஒன்றிய நிர்வாகிகள்கூட்டம். மாவட்ட தலைவர் தயா சங்கர் பங்கேற்பு.

உவரியில்பா.ஜ.க.  ஒன்றிய நிர்வாகிகள்கூட்டம். மாவட்ட தலைவர் தயா சங்கர் பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள உவரி யில் பா.ஜ.க. சார்பில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர்,மாவட்ட பொருளாளர் எஸ்.பி.பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.பால்சாமி,ஓ.பி.சி.அணி மாவட்ட தலைவர் நரேந்திர பாலாஜி, மீனவர் அணி மாவட்ட தலைவர் பெர்னார்டு அஜித்,மாவட்ட செயற்குழு மற்றும் பொறுப்பாளர் டி.சேகர் ,உவரி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார் கள். ஒன்றிய தலைவர் ஜெகதீசன் மாவட்ட தலைவர் தயா சங்கருக்கு” கீதாசாரம்” வரவேற்பிதழ் வழங்கினார்.

 

கூட்டத்தில் பொதுச்செயலாளர் கள் பி.கோபால்,எம்.குமரேசன், பொருளாளர் நவீன் செல்வகுமார், மகளிர் அணி செல்வராணி,முத்தமிழ் செல்வி,பொன்மணி, செல்வி ,கிளைத்தலைவர்கள் உவரி எஸ்.பிரபு, கிருஷ்ணராஜா, வெள்ளத்துரை, ஜெகதீஷ் , முத்துபெருமாள், பத்திரபாண்டி,தங்கத்துரை, ரெங்கசாமி, செந்தில், வேல்குமார், ராமனாதன், தங்கபாண்டியன், பேச்சிமுத்து, கணேசன், ரமேஷ், செல்வி, சிவா, குட்டிராஜா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், செல்வகுமார், முருகன், ஜெகநாதன், ரவீந்திரன், அலெக்ஸ் பாண்டியன், எஸ்.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாற்றுக்கட்சியிலிருந்து விலகி பலர் மாவட்ட தலைவர் முன்பு பா.ஜ.க.வில் சேர்ந்தனர் கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் ஆர்.என்.ஜெகதீசன், உவரி பஞ்சாயத்து கிளை தலைவர் எஸ்.பிரபு மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )