BREAKING NEWS

எடப்பாடி சரபங்கா நதியில் உள்ள செடிகள், தாமரை கொடிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்.

எடப்பாடி சரபங்கா நதியில் உள்ள செடிகள், தாமரை கொடிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்.

எடப்பாடி சரபங்கா நதியில் உள்ள ஆகய தாமரை கொடிகளை அகற்றிய நகராட்சி நிர்வாகம்.!!! வியப்புடன் பார்க்கும் பொதுமக்கள்…!

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அதை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்க்களாக தினமும் கன மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து எடப்பாடி சுற்றுப்பகுதியில் இருக்கும் ஏரிகளில் இருந்து வெளியெற்றப்படும் உபரி நீரானது சரபங்கா நதியில் கலந்து செல்கிறது. இதனை தொடர்ந்து, சரபங்கா நதியில் நீண்ட நாட்க்களாக ஆகாய தாமரை, நதி முழுவதுமாக படர்ந்துள்ள நிலையில், வெள்ளநீர் ஆனது அதன் ஓடு பாதையில் செல்ல முடியாமல் சரபங்கா நதியில் தேங்கியதால் எடப்பாடி பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி நகராட்சி நிர்வாகம் இன்று அதிரடியாக இரண்டு ஜேசிபி இயந்திரம் மற்றும் ஒரு கிட்டாச்சி இயந்திரம் கொண்டு சரபங்கா நதியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் மற்றும் முற் செடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் முக்கிய சாலையில் சரபங்கா நதி அமைந்துள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்ட நிலையில். எடப்பாடி போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த பத்திற்க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

மேலும் இதனை அப்பகுதி வழியாக செல்லும் ஏராளமான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )