எண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஈரோடு: எண்ணமங்கலம் ஊராட்சியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கர் (கிராம ஊராட்சிகள்) எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார்,
மருத்துவர் கவிதா துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி தாமரைச்செல்வி மகேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதிமயில் கந்தசாமி துணைத் தலைவர் சங்கீதா பாலசுப்ரமணியம் சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஊராட்சி செயலாளர் மணிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டது பின்னர் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
CATEGORIES முக்கியச் செய்திகள்