எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ஷபி வரவேற்புரையாற்றினர்.
நாங்குநேரி தொகுதி தலைவர் ஏர்வை ஆஷிக், அம்பை தொகுதி தலைவர் செய்யது, இராதாபுரம் தொகுதி தலைவர் தூலுவை தெளபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கிழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை மாவட்டம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் பயலரங்கம் (Party Convention) மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ” அடிமைதனத்தை ஏற்க மறுப்போம்” என்ற பிரச்சார தெருமுனண கூட்டம் அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷபி நன்றியுரையாற்றினார்.