எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அம்பாசமுத்திரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.

நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள , கனரா வங்கி பின்புறம் உள்ள தெருவில், புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைப்பதற்கு பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தப் பகுதியானது பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடமாக இருக்கின்றது. மேலும் நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், முக்கியமாக வழிபாட்டுத் தலங்களான கோயில்கள், சர்ச், பள்ளிவாசல் ஆகியன இருப்பதால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறும், பிரச்சனையும் ஏற்படும் சூழல் இருக்கின்றது.

மேலும் அந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறக்கூடிய வாய்ப்பும், அசாதாரண சூழ்நிலையும் இருப்பதால், மேற்படி டாஸ்மாக் மதுபான கடை புதிதாக அமைய இருப்பதை, தடுத்து நிறுத்தி, அனுமதி மறுக்குமாறு அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை எஸ். சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி, வர்த்தகரணி மாவட்ட செயலாளர் அம்பை ஜலீல், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ராஜா, அம்பாசமுத்திரம் நகர நிர்வாகிகள் நாசர், செய்யதலி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல் வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
