ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர்.

ஒடுகத்தூர் அருகே நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ, மாவட்ட சேர்மன் வழங்கினர்.
ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சேர்மன் மு.பாபு தலைமை தாங்கினார். தாசில்தார் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் திருக்குமரன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக ஆர்டிஓ பூங்கொடி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் 14, பவர் டில்லர் பிரேயர் 3, மகளீர் குழுக்கடன் 17, ஊட்டச் சத்து பெட்டகம் 50 பேருக்கு, முதியோர் உதவித் தொகை 14, குடும்ப அட்டை 24, மழை தூவான் 4, தெளிப்பான் 1, விதைகள் 3 என மொத்தம் ரூ. 1. 27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில், வேளாண் துறை, கால்நடை துறை, பொது சுகாதாரம், குழந்தைகள் நலத்துறை, தீயணைப்பு துறை என அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மகளிர் குழுவினர் செய்து வைத்திருந்த நம் நாட்டின் பாரம்பரிய உணவான கேழ்வரகு புட்டு, கொழுகட்டை, பயறு வகைகள் போன்றவை அதிகாரிகள் உண்டு மகிழ்ந்தனர்.
முகாமில், தாசில்தார் விஜயகுமார், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், பிடிஓ சுதாகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாசம், ஆர்ஐ நந்தகுமார், விஏஓக்கள் குமரேசன், சக்திவேல், சிவசக்தி, பிரேம்குமார், குனராஜ் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பாக்ஸ் நியூஸ்……..
குடிநீர் குட்டையை சீரமைக்க வேண்டும்
ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆர்டிஓ பூங்கொடி, மாவட்ட சேர்மன் மு.பாபு ஆகியோர் வழங்கினர்.
அப்போது குருவராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் பாலப்பாடி கிராமத்தில் உள்ள பூலான் குடிநீர் குட்டையை சீரமைத்து தர வேண்டும் என்றும், அதற்கு நீர் ஆதாரமாக உள்ள மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.