BREAKING NEWS

ஒரே ஒரு நிமிடம் தாமதத்தால் அனுமதி மறுப்பு!! கண்ணீருடன் வாசலில் காத்திருந்த மாணவர்கள்!!

ஒரே ஒரு நிமிடம் தாமதத்தால் அனுமதி மறுப்பு!! கண்ணீருடன் வாசலில் காத்திருந்த மாணவர்கள்!!

மாணவர்கள்

தமிழகத்தில் குரூப்2 மற்றும் 2ஏ தேர்வுகள் நேற்று நடந்து முடிந்தன. இத்தேர்வினை 4,96,247 ஆண் தேர்வர்களும், 6,81,089 பெண் தேர்வர்களும் எழுதினர். இதன் மூலம் மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு  எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த மொத்தம் 4,012 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வில் இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு தேர்வுகளை நல்ல முறையில் எழுதினர். மொத்தம் உள்ள 5,529 காலிப் பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் குரூப் 2 தேர்வை எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி

இந்நிலையில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இதன்படி தேனி மாவட்டத்தில் பெரிய குளம் தாலுகாவைச் சேர்ந்த 3,799 தேர்வர்களும், உத்தமபாளையம் தாலுகாவில் 6,179, தேனி தாலுகாவில் 16,610 என மொத்தம் 21,588 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்தபடி தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணிக்குள்ளாக கண்டிப்பாக தேர்வர்கள் வந்துவிட வேண்டும். 9 மணியை தாண்டி வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்வு மையத்திற்கு 9.01 மணிக்கு வந்த மாணவர்களை  கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்காததால் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வர்கள் கிராமப்பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்கு வர சரியான பஸ் வசதி கிடைக்காததால் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாமதமாக வந்ததாக கூறி தேர்வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியதுதான் என்று கண்ணீர்விட்டபடி தேர்வர்கள் அங்கிருந்து சென்றது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துவிட்டது.தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தும் ஒரு நிமிட கால தாமதம் அவர்களின் இத்தனை நாள் இரவு பகல் பாராமல் படித்த அனைத்து முயற்சியையும் வீணடித்துவிட்டது துரதிருஷ்டவசமானது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )