BREAKING NEWS

ஒரே நாளில் கொரோனாவிற்கு 14 பேர் பலி சுகாதாரத்துறை அதிர்ச்சி.

ஒரே நாளில் கொரோனாவிற்கு 14 பேர் பலி சுகாதாரத்துறை அதிர்ச்சி.

இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

13 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தினசரி தொற்று.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பிட்ட சில மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தியா முழுவதும் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 12,213 ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது 12,847 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32,70,577 ஆக பதிவாகி உள்ளது.

மேலும் நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை 11 ஆக பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 14 கொரோனா நோயாளிகள் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,24,817 ஆக பதிவாகி உள்ளது. 7,985 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,26,82,697 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 63,063 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,95,84,03,471 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 15,27,365 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )