ஒலிக்கத் தொடங்கும் சைரன்
ஒலிக்கத் தொடங்கும் சைரன்.

நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் வசதிக்காக உடுமலை நகராட்சி வளாகத்தில் சைரன் ஒலித்து வந்தது. ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்த சைரன் பழுதடைந்து கிடந்தது.

இந்நிலையில் இந்த சைரனை பழுது நீக்கவும் மீண்டும் ஒலிக்கவும் நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் உத்தர விட்டார். இதன்படி இதற்கான பணிகள் நடைபெற்றது. இனி காலை 10 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இந்த சைரன் ஒலிக்கும். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
