கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சையில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தஞ்சை ரயில் நிலையம் முன்பு பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

உழவர் பேரியக்கம் மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்பராக், மது போன்ற போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர்.

இப் பொருட்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்டன. இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்
