கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு.
![கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு. கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/IMG-20221113-WA0119.jpg)
– கடலூர் மாவட்ட செய்தியாளர் – கொ.விஜய்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக வட தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சேதுவராயன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வம் க/பெ சக்திவேல் ( விவசாயி )., இவர் கால்நடை மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கால்நடைகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் தனது வீட்டிற்கு பின்னால் இரும்பு பழுப்பு தகர சீட்டினால் ஆன கொட்டகையில் கால்நடைகளை கட்டி இருந்தார்.
அப்போது காலை 9:45 மணி அளவில் வீட்டிலிருந்து கொட்டகைக்கு வந்த மின்சார ஒயரில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு இரும்பு பழுப்பில் கட்டியிருந்த பசு மாட்டிற்கு மின்சாரம் தாக்கி இறந்து விட்டது.
மின்விபத்தினால் தனது பசு மாட்டை இழந்த தெய்வம் மற்றும் அவரது கணவர் சக்திவேல் செய்வதறியாது அழுதது, காண்போரை கண்கலங்க வைத்தது. மேலும் கருணை உள்ளம் கொண்டு தமிழக அரசு தனது மாட்டிற்கு இழப்பீடு தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.