BREAKING NEWS

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.

கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.

மத்திய அரசின் பெரும்பாலான வருமானங்கள் நாடு மற்றும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக செல விடப்படுவதால் புள்ளியல் துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ் பேச்சு.

 

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சகத்தின், தேசிய புள்ளியல் அலுவலகம் குடும்பங்களின் நுகர்வு செலவினங்கள் குறித்த ஆய்வினை ஜூலை மாதம் முதல் மேற்கொள்கிறது , இதுகுறித்து புள்ளியியல் துறையின் 14 மாவட்ட அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தஞ்சாவூரில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

 

 

பயிற்சி கூட்டத்தில் பேசிய புள்ளியல் துறையின் தென் மண்டல இணை இயக்குனர் விஷ்ணு ராஜ், ஒரு வருட காலத்திற்கு மேற்கொள்ளபடுகின்ற ஆய்வானது மொத்த நுகர்வில் பல்வேறு வகையான பொருட்களின் தொகுப்புகள் ஆற்றும் பெரும் தாக்கங்களை. தகவல்களை பெறுவதை இலக்காக கொண்டுள்ளது, மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் நிலவும் நுகர்வோர் விலைக் குறியீடுகளை தொகுத்தளிக்கவும் பயன்படுகிறது.

 

 

மேலும் இந்த ஆய்வின் வாயிலாக பெறப்படும் தகவல்கள் மூலம் மக்களின் வாழ்வு நிலை சமூக நுகர்வு, சமூக நலன் மற்றும் நுகர்வில் ஏற்படும் சமனற்ற நிலை போன்றவற்றை அறிந்து புள்ளியியல் குறியீடுகளை தொகுப்பதற்கும் பயன்படுகிறது. மத்திய அரசின் பெரும்பாலான வருமானங்கள் நாடு மற்றும் மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக செல விடப்படுவதால் புள்ளியல் துறை மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று புள்ளியில் துறையின் அவர் பேசினார்.

 

இதுகுறித்து முதுநிலை புள்ளியல் அலுவலர் மற்றும் தலைமை அலுவலர் பழனியப்பன் கூறுகையில், மக்களுடைய நுகர்வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும் மாற்றம் ஏற்படுகிறது. புள்ளியல் துறை கணக்கெடுப்பு மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை கணக்கெடுத்து அரசிடம் ஒப்படைக்கப்படும் இந்த ஆய்வானது அடுத்த ஒரு வருட காலத்திற்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )