கமுதியில் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் 51 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக 50 வது பொன்விழா ஆண்டு நிறைவு, 51ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு,
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கமுதி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் காளிமுத்து,ஒன்றிய அவைத்தலைவர் சேகரன்,
மாவட்ட மின்சார பிரிவு செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் நிர்மல்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
CATEGORIES இராமநாதபுரம்