BREAKING NEWS

கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம்,கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அப்போது மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் பிரம்மாண்ட மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் தண்டாயுதங்கள் ஏந்தி சண்டைக் காட்சி நடைபெற்றது.

மேலும் மூன்று முறை வலம் வந்தபின் பீமன் துரியோதனின் தொடை பகுதியில் கட்டையால் அடித்து துரியோதனனை படுகளம் செய்தார்.

தொடர்ந்து துரியோதனன் தாயான காந்தாரி இறந்த மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழுகின்ற காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் திமிரி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சல பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு கவுன்சிலர் வளர்மதி குமார், ஊர் நாட்டமைதாரர்கள், பொதுமக்கள் உட்பட சொரையூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள புது சொரையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகாபாரத திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த 17 நாட்களாக மகாபாரத சொற்பொழிவுகள் இரவு ஸ்ரீ முத்தியம்மன் தெரு கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தில் முக்கிய நிகழ்வான 18 நாள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அப்போது மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் பிரம்மாண்ட மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

CATEGORIES
TAGS