கலைஞரின் 99 வது பிறந்தநாளையொட்டி தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கான “கராத்தே போட்டி” 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்:

தஞ்சை அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை யொட்டி ஓபன் கராத்தே போட்டி முன்னாள் அமைச்சர் S.N.M.உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது.


தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் T.K.G.நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட தி.மு.க வினர் ஏராளமானோர் கராத்தே போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர்.


4 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்ற
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு நினைவு கோப்பைகள் பரிசளிக்கப்பட்டன.
CATEGORIES தஞ்சாவூர்
