கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
கரூர் மாநகராட்சிபட்ட காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்தார்
கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (2023- 2024) நிதியிலிருந்து ரூ 12 லட்சம் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது
இந்த நிழற்குடையை மக்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா கல்வெட்டு நீ திறந்து வைத்து, மரக்கன்றுகளும் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், மேயர் கவிதா கணேசன், தெற்கு பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணி, மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ்,பூபதி, தியாகராஜன், சரண்யா குழந்தைவேலு, சரஸ்வதி கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..