BREAKING NEWS

கல்வி

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்தக்கூடாது; தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.v
சென்னை: இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக, வகுப்பறைக்குள் வெளியில் நிற்கவைப்பதாக தகவல்கள் வருகின்றன.
எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அனுப்புவது, பெற்றோர்களை தரக்குறைவாகப் பேசுவதும் உள்ளிட்ட செயல்கள் அடிப்படைக்கல்வி உரிமையை மறுக்கின்ற செயலாகும்.எனவே மாணவர்களை கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )