களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போட்டி நடைபெற்றது.

களக்காடு நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற மக்கள் இயக்கத்தின் மூலம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மீரானியா மேல்நிலைப்பள்ளி, கோமதி அருள் நெறி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ் தலைமை தாங்கி, பரிசுகளை வழங்கினார். துணை தலைவர் ராஜன், கவுன்சிலர் ஜின்னா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு களக்காடு வளமீட்பு பூங்காவின் செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது.
