BREAKING NEWS

காஞ்சிபுரம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் வார்டு கவுன்சிலரும் தற்போதைய 1வது வார்டு சுயேச்சை வேட்பாளரின் கணவன் கைது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் வயது 42.
இவர் முன்னாள் வார்டுகவுன்சிலர்.

இந்நிலையில் இவர் குடியிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் தனக்கு பதிலாக தன்னுடைய மனைவி தனலட்சுமியை சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இன்னிலையில் இவருக்கும் திமுக வேட்பாளரான லில்லி மாணிக்கத்துக்கும் கடும் போட்டி நிலவிவந்தநிலையில்

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ள தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது பூபாலன் தன் மனைவிக்காக ராமாபுரம் பகுதியில் பொதுமக்களை பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஒட்டு கேட்டதை பார்த்த காவல்துறையினர் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

மேலும் முன்னாள் வார்டு கவுன்சிலரும்,தற்போதைய சுயேட்சை வேட்பாளரின் கணவருமான பூபாலன் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வார்டில் திமுக எளிதாக வெற்றி பெறும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )