காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து திமுகவினர் அனைவரும் சமூக நீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 10வது வட்ட திமுக பொறுப்பாளர் ஜேசிபி சுரேஷ், தேவநேசன், அரிகிருஷ்ணன், ராஜ்குமார், பேச்சாளர் கண்ணன் மற்றும்
வேலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆர்.விஜயகுமாரி, முன்னாள் காட்பாடி ஒன்றிய செயலாளர் தயாநிதி மற்றும் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
TAGS Dmkஅரசியல்காட்பாடிகாட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகபெரியார் பிறந்த நாள் விழாவேலூர்வேலூர் மாவட்டம்