காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி -போக்குவரத்து மாற்றம் :கலெக்டர், எஸ்.பி., ஆய்வு!

வேலூர் மாவட்டம் ,காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுதடைந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக அவை சரி செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்களால் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டு மாற்று வழிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டு தற்போது பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே அதிவேகமாக தொடங்கிய இப்பணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும், மக்களின் அசௌகரியம் தீர்க்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் அப்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, துணை மேயர் சுனில் குமார், காட்பாடி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் குமரன், ஒன்றாவது மண்டல உதவி ஆணையர் செந்தில் குமரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் , துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.