BREAKING NEWS

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.

காட்பாடி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வி. டி. கே. நகரில் திருப்பதி செல்லும் இருப்பு பாதைக்கு அருகில் ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ ராஜகணபதிக்கு இளநீர், பால், நெய், எண்ணெய், அபிஷேக பொடி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து இறுதியாக சந்தனம் தெளித்து ஸ்ரீ ராஜ கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த ஸ்ரீ ராஜ கணபதியை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர்.

குறிப்பாக அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ஸ்ரீ ராஜகணபதியை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS