BREAKING NEWS

காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி அரசுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வலியுறுத்தி ஓய்வு பெற்ற அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் நாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் அனைத்து துறையில் ஓய்வு பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் நாதன் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கலைய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவதென முடிவுசெய்து ஏற்கனவே ஒரு முறை நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் இன்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இது இறுதி கட்டமாக அடுத்த மாதம் 21ம்தேதி சென்னையில் கணக்குத் துறை அலுவலர் ஆணையர் அலுவலகம் முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )